தமிழ் நண்பர்களே வரவேற்கிறேன்

in INDIAN EXPRESS2 years ago (edited)

image.png

source
அன்பான தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்!

இந்த சமூகத்தில் நான் உங்களை உறுப்பினராக சேருமாறு அழைக்கிறேன் ஏனென்றால் மற்ற மொழிகளுக்கு என்று நிறைய சமூகங்கள் இருந்தாலும் நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதத்தில் எதுவுமில்லை.

தமிழில் நீங்கள் போஸ்ட் செய்வது மிகவும் எளிதானது, கூகுள் டிரான்ஸ்லேட்டரில் நீங்கள் பேசினாலே அது தமிழில் பதிவு செய்து கொள்ளும், எந்தவித எடிட்டிங் இல்லாமல் அவற்றை நீங்கள் அப்படியே பதிவிடலாம். தொடர்ந்து உங்களுடைய இடுகைகளை தமிழில் நீங்கள் பதிவிட்டு வரும்பொழுது இது ஒரு நிரந்தரமான ஒரு நல்ல முறையான கம்யூனிட்டி ஆக வளரும் என்று நம்புகிறேன்

ஏனென்றால் தற்சமயம் ஸ்டீமிட்டில் தமிழர்கள் வெகுவாக சேர்ந்து வருகிறார்கள் இப்பொழுது ஏற்கனவே ஏறக்குறைய 10 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை உயரும் என்று நம்புகிறேன்.

நீங்கள் என்னென்ன இடுகைகளை இங்கு பதிவிடலாம் நமது ஸ்டீமிட்டில் ஆங்கிலத்தில் இருக்கும் பதிவுகளை நீங்கள் அப்படியே பதிவிட்டால் அது Plagiarism என்று கருதப்படும் ஆனால் அதையே நீங்கள் ரில்தமிழில் மொழி பெயர்த்து நமக்கு ஏற்றார் போல் வடிவமைத்து பதிவிடும் போது அது Plagiarism என்று கருதப்படாது

எனவே நீங்கள் எந்த ஒரு ஆங்கில பதிவையும் எளிதாக அவற்றை நீங்கள் பதிவிடலாம். உதாரணமாக நியூ மூவி ரிவ்யூ, தமிழ் விமர்சனம், தமிழ் டைரி, டுடோரியல், உணவு செய்முறை, கோடக் ரிவ்யூ போன்றவற்றை நீங்கள் அப்படியே தமிழில் மொழிபெயர்த்து வழங்கலாம் .

என்னை பொருத்தவரையில் ஆங்கிலத்தில் நீங்கள் ஒரு இடுகையை உருவாக்குவதற்கு எடுக்கும் நேரத்தைவிட தமிழில் பாதி நேரமும் செலவிட்டு ஒரு இடுகையை உருவாக்க முடியும் எனவே எல்லோரும் இதில் சேர்ந்து இடுகைகளை உருவாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

CC: @jyotithelight @lavanyalakshman @saravanann @shravana @rey01v @ajay27

♣ ♣ நன்றி ♣ &/b#9827;

DAMULOGO1.gif

Sort:  

எங்கும் தமிழ் எதிலும் தமிழ். நல்ல முயற்சி. நானும் சிலவற்றை தமிழில் முயற்சித்தேன்.
பதிவு
பதிவு
பதிவு

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள், தமிழால் ஒன்றுபடுவோம், வாழ்க தமிழ்

So happy on seeing Tamil Article on steemit

நாளை முதல் நான் கட்டுரைகளை இடுகையிட ஆரம்பிக்கிறேன்

நன்றி நண்பரே இது மிகவும் முக்கியமான ஒன்று நம் அடையாளத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது. நான் நம் தாய் மொழி தமிழில் இடுக்குகள் எழுதி பதிவிட முயற்சி செய்கிறேன்

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!! நாளை முதல் நானும் இங்கே எழுதப்போகிறேன்